Wednesday, October 28, 2009

ராகுல் தினகரன் - ஒரு அறிமுகம்

Share |
நீண்ட நாட்களாகவே எழுத நினைத்த பதிவு இது. இன்றைய தேதிக்கு இதை விட ஒரு சிறந்த சந்தர்ப்பம் அமையாது.
ராகுல் தினகரன் - கல்கி நிறுவனத்தின் (Kalki Mechanical Prototypes Pvt Ltd) நிர்வாக இயக்குனர். பொறியியல் படித்த ஒவ்வொருவரும் தங்களுக்கான வேலையே வேறு ஒரு இடத்திலே தேடிக் கொண்டிருக்கையில், தனக்கான சுயத்தை தானாகவே தோண்டி எடுத்தவர். எத்துனை சோதனைகள் வந்தபோதும், தன்னுடைய முடிவில் உறுதியாக நின்று, உழைப்பை மட்டுமே உரமாக விதைத்து இன்று ஒரு சிறந்த தொழிலதிபராக உருவெடுத்திருக்கிறார்.

2005 ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கப்பட்ட கல்கி நிறுவனம் இயந்திர வடிவைமப்பு, (machine design) இயந்திர கட்டுமானம் (machine building), நுகர்வோர் உற்பத்தி, (consumer products) தானியங்கி உபகரணங்கள் (Automotive Systems) என்று பல இயந்திர பிரிவுகளில் சிறப்பானதொரு பங்கு அளித்து வருகிறது. இதில் மற்றுமொரு குறிப்பிடித்தக்க அம்சம் இவர் செய்யும் ஊனமுற்றோருக்கான உபகரணங்கள். தொழில் என்றால் பணம், அதிகமான விருப்பு தவிர்த்து இப்படியொரு தொழில் சார்ந்த சமுதாய எண்ணம் இருப்பது பாரட்டத்தக்க அம்சமாக விளங்குகிறது.

கல்லூரியில் படிக்கும்பொழுது எல்லோரும் அவர்களின் எதிர் பாலரை காதலிக்க இவரின் காதல் மட்டும் வாகனங்களின் மீது இருந்துள்ளது. பந்தய வாகனங்கள் (Motor Car) இவரை வசீகரித்தது போல வேறு ஏதும் இவரை வசீகரிக்கவில்லை.அந்த காதலே தன்னுடைய நிறுவனத்தில் பந்தய வாகனங்களுக்கென ஒரு தனி துரையையும் வளர்க்க வைத்துள்ளது.

தன்னுடைய அறிவை பிறருக்கு அளிப்பவனே அடுத்த தலைமுறையின் ஒரு சிறந்த தலைவன். அவ்வகையில் கல்லூரியில் சொல்லி தரும் பாடங்களை விடுத்து ஒருவன் ஒரு இயந்திர துறையில் வெற்றி பெற அவனுக்கான முழு பயிற்சியையும் ராகுல் கொடுத்து வருகிறார். இவருடைய பயிற்சி துறை மற்ற முக்கியமான இயந்திர துறையை சேர்ந்த CAD மென்பொருளையும் கற்பித்து வருகிறது.

அவரின் உழைப்பை பற்றி நான் இங்கு அவ்வளவாக கூறவில்லை என சிலர் கருதலாம். நான் சொல்வதை விட நீங்களே அவரின் உழைப்பு அவரை எங்கே கொண்டு சென்றுள்ளது என பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.CNBC தொலைக்காட்சியும், லுப்தான்சா நிறுவனமும் ஒரு வளர்ந்த தொழில் அதிபரையும், உலகு அறியாத ஒரு வளர்ந்து வரும் தொழில் அதிபரையும் உலகுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியே நீங்கள் மேலே பார்த்தது. TVS நிறுவனத்தை சேர்ந்த வேணு ஸ்ரீநிவாசன் அவர்களை கல்கி நிறுவன நிர்வாக இயக்குனர் ராகுல் தினகரன் காணும் நேர்காணல்.

ராகுல் அவர்களை வேறு ஒரு வளர்ந்து வரும் தொழில் அதிபர் நேர்முகம் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது திண்ணம்.
அவரை பற்றி மேலும் அறிய :
http://www.kalkimechanicalprototypes.com

9 comments:

raz said...

என்னடா காமெடியா எழுதுவ நினைச்சா இப்படி அவன விளம்பரம் படுத்துற.

Anonymous said...

Rahul anna best of luck for your bright future

ச. சிவராம் குமார் said...

கஷ்டப்பட்டு வீடியொ upload செய்த எனக்கு நன்றி தெரிவிக்காததை வண்மையாக கண்டிக்கிறேன்.. :-)
நீ அவனை திட்டுனாலே.. அவன் காசு தரமாட்டான்..... புகழ்ந்தா மட்டும் தந்துருவானா..
கடைசில பாதிக்கப் படப் போறது என்னமோ.. நாந்தான்..
இன்னொரு பதிவு போடறேன்னு சொன்னியே, அது எப்போ ராகுல் கல்யாணத்துக்கு அப்பறமா?

என்னதான் சொன்னாலும் ராகுல் நமக்கு ஒரு inspiration என்பது மறுக்க முடியாதது....

ஜெகா!
தமிழ் terminologies அற்புதம்..
பாராட்டுக்கள்...

VJ Prakash... said...

வாழ்த்துகள் ராகுல் !!

Dates ,

யார் சொல்லலென்ன என்ன..நான் சொல்றேன்..மிக்க நன்றி நீங்கள் இந்த வீடியோ வை upload செய்ததற்காக :-) !

Anonymous said...

great work rahul.keep it up.wish u acheive a lot more.
anbudan,
s.jegan

kripa said...

enga familyla rahula patthi therinjadaivida ungalukku nariya therinjurukku. siva annakkum thanx videoku. idhhavida avanukku vera onnum vendam. thanx a lot for writing about him. really great.

for those who dont know me, i am kripa, rahul's sis.

KK BALAJI said...

miga miga arumai tamil marandhu varum indha naatkalil unadhu tamil valam mikka arumai.
machine design , machine building , consumer proudcts , automotive system poandravaikku tamil arthaththil koduthu bracketil aangilathil vilakkam koduththadhu nethi adi.
umadhu tamil pattrukku enadhu vaalththukkal.
rahulin valarchi menmaelum thoadara en vaalthukkal. rahulai pattri eludhiya anaiththum arumai , valarndhu varum ilaignargalukku rahul oru narchaandru. adhai vida oonamutroarukkaana ubagaranangal endra vari ennai thottu vittadhu. adharkum maelaaga you tube il veliyidapaata andha sila nimida kaanoliyil naan kandu asandhadhu , rahul thanadhu companiyai kaattum boadhu mudhalil andha thiraiyil therindhavar SUDHAKAR (ayya) thaan, andha videovae rahul- lin adhuththa katta vetripadikkalin asthivaarangal.

Rahulai pattri nee solliyadhu anaiththum nandraaga irundhadhu , oru arusuvai unavai undadhu poal irundhadhu aanaal adhil uppillai.
sudhakar(ayya) vai pattri oru kurunseidhiyaavadhu solli irukalaamae enbadhu
enadhu karuththu. nee ayya vai pattri sollaadhadhu thavaru endru solla vara villai, sonnaal innum nandraaga irukkumae endru thaan
solgiraen.

" THAALTHTHI PAESUM BOADHU KOOTTATHIL YAARAI PATRI YAAVADHU PAESAMAAL IRUNDHAAL THAPILLAI"

" UYARTHTHI PAESUM BOADHU PAKKATHIL IRUKKIRAVARAIYUM KONJAM UYARTHTHI PAESINAAL THAPILLAI".

tamilai kaapatra un pondroar irukkum varai tamil annai endrum magilndhu kondae irupaal.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment