Wednesday, December 22, 2010

அது ஒரு புறவழிச் சாலை!

Share |
அது ஒரு புறவழிச் சாலை!

வேகத்தடை ஏதுமில்லா
புறவழிச் சாலை!

முகப்பு விளக்குதான்
எங்கள் முகவரி

முகப்பு விளக்கு வெளிச்சமே
எங்கள் தொடர் இருட்டு


இரு கண்களை நானும்
ஒரு கண்ணை அவனும்
ஊடுருவும் தருணம்!

ஊடல்
கூடல் முன்
ஊடுருவலே பிரதானம்!

ஆணா,
பெண்ணா,
என்னா என்பதில்
படியும் பேரம்

இருட்டில்
திருட்டில்
எல்லாம் முடியும்


வெளிச்சம் கண்டு
வெகு நாளானது

வெய்யில் வாராது
போய்விடுமோ?

வெய்யில் இல்லாத
தேசத்தில் மழை வருமோ?

ஐயோ வேண்டாம்
மழை வரும் வேளையில்தான்
மானம் அதிகமாய்
பரிபோகிறது!

நெடு நாட்களுக்கு பிறகான கவிதை முயற்சி இது. என்னை பாதிக்காத எந்த ஒரு விசயத்தையும் என்னால் கவிதையாய் உருவாக்க முடிவதில்லை. நான் தினம் செல்லும் புறவழி சாலையில் பார்க்கிற நிகழ்வு இது. மிருகங்கள் கூட மழைக்கு ஒதுங்கிவிடுகிறது. மழையில் இவர்கள் படும் துயரம்....

3 comments:

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்குங்க

//யாயும் யாயும் யாராகியரோ//

யாயும் ஞாயும் யாராகியரோ தான் சரின்னு நினைக்கிறேன் சரி பாருங்களேன்

Anonymous said...

என்னை பாதிக்காத எந்த ஒரு விசயத்தையும் என்னால் கவிதையாய் உருவாக்க முடிவதில்லை. :-)

Anonymous said...

pinniteenga ponga..!

Post a Comment