என்னுடைய பதிவு தலைப்பை பற்றி நிறைய பேர் கேட்டிருந்தார்கள். அதற்கான அர்த்தம் என்ன, இதன் மூலம் நான் ஏதேனும் சொல்ல வருகிறேனா, இது ஏதேனும் சங்க பாடலா...இது போன்ற கேள்விகள்.
யாயும் யாயும் யாரகியரோ (ஆங்கிலம் மற்றும் தமிழ்) என்பதை வலையில் தேடியிருந்தால் நான் சொல்லும் விளக்கத்தை விட வேறு சிறப்பான விளக்கங்கள் கிடைத்திருக்கக்கூடும். எனினும் இதன் விளக்கத்தை கூறுவது எனது கடமையாகிறது.
முதலில் பாடல்:
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.
(குறுந்தொகைப் பாடல் எண் நாற்பது. ஆசிரியர் செம்புலப்பெயனீரார்.)
இது குறுந்தொகை பாடல் என்றும், இதன் ஆசிரியர் பெயர் அறியபடாத காரணத்தினாலும், அவர் பாடலில் உபயோகித்திருக்கும் (4 வது வரி) 'செம்புலப் பெயல்நீர்' அவருடைய பெயராக உருவாகியுள்ளது.
விளக்கம்:
பாடல் விளக்குவதற்கு முன்....சில வரிகளை பார்த்த உடனையே நம் மனது, "ஓ....தூய தமிழா, அப்ப நமக்கு புரியாது" என நினைக்கிறது. அதனை தயவு செய்து உடையுங்கள். இந்த பாடலையே கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
யாயும் யாயும்.... (இன்றும் நம் ஊர்களில் அன்னையை நாம் 'ஆயி' என்று அழைப்போம்).
யாராகியரோ (நான் விளக்க வேண்டுமா..?)
எந்தையும் (எந்தயிலே ஒரு தந்தை வந்தாரா..)
கேளிர் ( இதற்கு அர்த்தம் தேவைப்படலாம் - கேளிர் - உறவு கொண்டவர்)
யானும் நீயும் (உங்களுக்கு புரியும்)....
செம்புலம் (சிவந்த நிலம்)பெயல்நீர் (மழை நீர்)
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே (உங்களுக்கு பாடல் புரிந்துவிட்டது..)
"என் தாயும் உன் தாயும் எவ்விதத்திலும் அறிந்தவர் இல்லை. என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவு கொண்டாருமிலர். நானும் நீயும் இதுவரைகாலம் ஒருவரை யொருவர் முன்னறிமுகம் எனவும் ஆயிலேம், எனினும் என்ன வியப்பு, நம் இருவருடைய இதயங்களும் சிவந்த நிலத்தில் பெய்த மழைநீர் எங்ஙனம் உருமாறி பிரித்தறிய வொண்ணாதபடி, மண்ணின் தன்மையை அடைந்து விடுமோ அதுபோல ஒன்று கலந்து விட்டன"
(மூலம் : திண்ணை.காம்)
இது தலைவன் ஒருவன் தன் காதலை தலைவியிடம் சொல்வதுபோல் பெரும்பாலும் அறியப்பட்டுள்ளது.
நான் "அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே" என்பதை "அன்பு கொண்ட எல்லா நெஞ்சங்களும் ஒன்றாய் கலக்கும்" எனவே பார்க்கிறேன்.
எல்லோர் நெஞ்சிலும் கண்டிப்பாய் இருப்பது அன்பு ஒன்றே. காதல் ஒருவரிடம் மட்டும்தான் செய்ய முடியும். அன்பை எல்லோரிடமும் பகிரலாம். அன்பு செய்யுங்கள்.
"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்...."
பி.கு : ஏதேனும் பிழையிருந்தால் சுட்டிகாட்டவும். நன்றி.
Thursday, April 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
Nalla peyar kaaranam! Vilakkam arumai.
விளக்கமெல்லாம் பிண்ணிட்ட போ !!
நல்ல பாட்டு :)
இந்த பாடலோட தழுவல் தான் "நறுமுகையே நறுமுகையே" பாட்டோட சரணம். இந்த பாட்ட நான் முதல்ல பார்த்து நா. பா- வோட 'பொன் விலங்கு' புதினத்துல.
ஒரு சின்ன விளக்கம் - இது "Love at First Sight' பற்றியும் படிச்சா மாதிரி ஞாபகம்.
வாழ்த்துக்கள்.
சு.கு சொன்ன மாதிரி இது நறுமுகையே-ல அழகா கையாண்டிருப்பார் வை.மு ..
ஆனா அதுக்கு முன்னாலேயே இது நமக்கு பாடத்துல இருந்துதோன்னு ஒரு சந்தேகம்....
அப்படியா, சிவா! எனக்கு படிச்ச ஞாபகம் இல்லை.
ஆனால் உன் comment-அ ஒரு கதைல படிச்சுட்டு சிரிச்சுட்டு இருந்தேன்.
"அமெரிக்க வாழ் இந்தியர்கள் கதையில் பாவாணர் தமிழ் பாராட்டுக்குரியது! (ஒரு டப்பிங் படம் பாத்த effect தருது..) " :-)
நல்ல பாடல், நல்ல பணி
-மின்னல்
தயவு செய்து கீழ்வரும் சொற்களுக்கு விள்க்கம் தாருங்கள்.
நறுமுகையே
அற்றைத் திங்கள்
நெற்றித்தாறள
கொட்டிறப் பொயகை
புரவிய்ல்
முடிந்தால் e-mail பன்னவும்
sasi_kaja@yahoo.com
மிக்க அருமையான் விளக்கம் காற்றின் மொழி. நன்றி
Post a Comment