Monday, April 20, 2009

யாழிசை ஒரு அறிமுகம்

Share |
"இயந்திர வாழ்கை நம்மை அல்லும் பகலும் ஆட்டி படைக்க ஒரே விடிவு என நான் கருதியது தமிழ் இலக்கிய வாசிப்பு...இது ஓர் இனிய இலக்கிய அனுபவ பயணம்.வாழ்வின் தேடல் குறித்து உணர செய்ய வாசிப்பு என்பது ஒரு சுகானுபவம்."

தன்னுடைய பதிவு பற்றி லேகாவின் வார்த்தைகள் இவை.

இயந்திர வாழ்க்கை மட்டுமின்றி, எவ்வயதினரும் தங்களுடைய வாழ்க்கையயை அழகாக செப்பநிடவைப்பது புத்தகங்கள். நானும் என் நண்பனும் பேசிக் கொண்டிருக்கையில், எல்லா குழந்தைகளும் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் வாய்ப்பு ஏற்படுகிறதோ இல்லையோ, கண்டிப்பாக நூலகத்திற்கு செல்ல வேண்டும் என நினைப்போம். அப்படி ஒரு பழக்கத்தை நம் பெற்றோர் நம்மீது திணித்தால் கூட அது தவறன்று. எல்லா தரப்பினரையும் ஏதோ ஒரு புத்தகம் நிட்சயமாய் கவரப் போவது நிட்சயமான உண்மை .

எத்தனையோ நல்ல புத்தகங்கள் நமக்கு வாய்த்திருந்தாலும், நம் முன்னோர் நல்ல புத்தகங்களை பற்றி நமக்கு சொல்லாதது ஒரு குறையே. இன்னும் சொல்லப்போனால் நம் ஒவ்வொருவரின் தந்தையும், அன்னையும் செய்ய வேண்டிய ஒரு மாபெரும் பணியை இவரது வலைப்பதிவு செய்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

ஒவ்வொரு புத்தகத்தையும் ஆழ்ந்து படித்து, அதிலுள்ள ஒவ்வொரு உணர்ச்சியையும் தன்னுள் உள் வாங்கி, மனம் எழுப்பும் கேள்விகளுக்கு விடை தேட முயற்சித்து நம்மையும் அந்த பாதைக்கு வெகு சுலபமாக அழைத்து செல்வது இவரின் 'நாவல் பற்றிய விமர்சனங்கள்'.

வெவ்வேறு தரப்பில் இருக்கும் நிறைய எழுத்தாளர்களின் புத்தகங்களை தேடி தேடிப் படித்து, நமக்கும் ஒரு நல்ல வாசிப்பை உருவாக்குகிறார். இவரின் எழுத்து நடையும் கூடிய விரைவில் இவரும் ஒரு நல்ல எழுத்தாளராக உருவாகப் போகிறார் என்பதற்கு சான்று.

அது மட்டுமன்றி நல்ல எழுத்தாளர்கள் பற்றியும் நமக்கு அறிமுகம் செய்து வைத்து நம்மையும் புத்தக உலகத்திற்கே அழைத்து செல்கிறார்.

புத்தகங்கள் மட்டுமின்றி நல்ல கட்டுரைகள், உலக திரைப்படங்கள் என இவரின் விமர்சனமும், கருத்து பகிர்வும் தொடர்கிறது.

இலக்கிய உலகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ராமகிருஷ்ணன் அவர்களின், 2008 விருப்ப பட்டியலில், லேகாவின் வலைப்பதிவும் ஒன்று என்பது அவர் செய்யும் பணிக்கு கிடைத்த ஒரு நிறைவான அங்கீகாரம்.http://www.sramakrishnan.com/deep_story.asp?id=216&page=

நீங்கள் ஒரு பெற்றோராரக இருந்து, உங்கள் குழந்தை நாளை உங்களிடம் நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்ய சொல்லி கேட்டால், உங்களுடைய கைவிரல் காட்டும் இடம் இதுவாகத்தான் இருக்கும்:http://www.yalisai.blogspot.com/

8 comments:

ச. சிவராம் குமார் said...

ஜெகா!
மிகப் பயனுள்ள அறிமுகம்..
சில நாட்களுக்கு முன்பு எதேச்சையாய் யாழிசை வலைப்பூவிற்கு சென்றேன்...
லேனா-வின் விஸ்தாரமான வாசிப்பை காண நேர்ந்தது..
நாம் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டி இருப்பது புரிந்தது...
நல்ல வழிக்காட்டித் தளம்...
பாராட்டிற்குரிய அறிமுகம்...

Unknown said...

என்னை போன்று இலக்கிய உலகத்திற்கு புதியவர்களுக்கு நல்ல அறிமுகம்.. இரண்டு தளத்திலும் நல்ல தொடர்புகள் உள்ளன..

ச. சிவராம் குமார் said...

//லேனா-வின் விஸ்தாரமான வாசிப்பை//
லேகா என்று வாசிக்கவும். மன்னிக்கவும்..
விஷயம் மனதில் பதிந்த அளவிற்கு பெயர்கள் பதிவதில்லை எனக்கு...
எப்படி சமாளிப்பு.... :-)

லேகா said...
This comment has been removed by the author.
லேகா said...

Hey Jags..

Dono wat to say!!Will consder this post as my b'day gift:-)

கார்த்திகேசன் said...

உங்களது எழுத்து நடை மிகவும் அற்புதமாக உள்ளது

Anonymous said...

yallisai blogspot is a great info !
my small suggestion ...u can sharpen ur writing flow more by avoiding the repeated words and spliting statements often ...

Anonymous said...

one such sample is " எல்லா தரப்பினரையும் ஏதோ ஒரு புத்தகம் நிட்சயமாய் கவரப் போவது நிட்சயமான உண்மை "

Post a Comment