Thursday, May 28, 2009

நிருபர் (கதை - 9) - போட்டிக்கான சிறுகதை

Share |
குழந்தை தொழிலாளிகள்...முன்வருமா சமூகம்..?
------------------------------------------------------------------------
வாசு


வாகனங்களின் சத்தம் காதில் இரைந்தது.

"உன் பெயர் என்ன தம்பி..?"
அவன் என்னை பார்த்தான். கண்கள் என்னை பார்த்தபோதும் அவனுடைய கை மிக நேர்த்தியாக பூக்களை ஒரு நூலில் கோர்த்துக்கொண்டிருந்தது. என் கையில் இருக்கும் சின்ன ஏடு, என் கழுத்தில் மாட்டி இருந்த புகைப்படக் கருவி எல்லாம் பார்த்தான்.

"பாண்டி சார். பூ வேணுமா சார்..?"
"இல்லபா உன்ட்ட கொஞ்சம் பேசணும்."

கொஞ்சம் வித்தியாசமாய் பார்த்தான்.
"என்ன சார் பேசணும்..? நீ அந்த பத்திரிக்கை கம்பேனீல வேல பாக்குறியா சார்..?"

"ஆமா தம்பி. உன் வயசு என்ன..?"
"என் வயசு 12 இருக்கும் சார். நான் பொறந்த மாசம் அம்மாக்கு சரியா நெனவில்லியாம்."

"எவ்ளோ நாளா பூ வியாபாரம் பாக்குற..?" இடையிடையே குனிந்து பூக்களை எடுத்துக்கொண்டான்.
"இப்போ ஒரு ரெண்டு வருசமாதான் சார். மொத எங்க அப்பாகூடதான் வந்திட்டு இருந்தேன். இப்போ அப்பா வேற ஏரியா பாக்குறார். அதனால என்னையே பாத்துக்க சொல்லிட்டாரு."

"அதுக்கு முன்ன என்ன பண்ண..?"
"இஸ்கூல் போவேன் சார்.."

"எந்த கிளாஸ் வர படிச்ச..?"
"அஞ்சாவது வர படிச்சேன் சார். அதுக்கு அப்புறம்தான் அப்பா பூ வியாபாரம் பாக்க கூட்டிட்டு போனார்.."

"ஸ்கூல் போகாதது உனக்கு கஷ்டமா இல்லையா..?"
"ஆரம்பத்தில என் பிரண்ட்ஸ் எல்லாம் பாக்காம கஷ்டமாத்தான் இருந்திச்சு. அப்புறம் தெரியல சார்.."

"நீ ஸ்கூல்-ல என்ன ரேங்க் வாங்குவ..?"
"10 குள்ள வருவேன் சார்.."

"ஒரு நாளைக்கு எவ்வளவு வியாபாராம் பார்ப்ப..?"
"சில நாள் 100 ரூவா வரும். நல்ல வியாபாரம்னா, 200 ரூவா வரும் சார்.."
"உன்ன ஒரு போட்டோ பிடிச்சிக்கவா..?"

பாண்டி அண்ணா சாலை நடை மேடையில் தொழில் செய்யும் ஒரு குழந்தை தொழிலாளி.

இன்னும் கொஞ்ச தூரம் நடந்தேன்.

வயது மூத்த ஒருவரும், சிறுவனும் ஒரு குடையின் கீழ் அமர்ந்திருந்தனர்.அந்த மூத்தவர் சுற்றி நிறைய பூட்டுக்களும், சாவியும் இருந்தது. அந்த சிறுவன் ஒரு கூடை நிறைய மாம்பழம் வைத்திருந்தான்.

"என்ன நைனா...சாவி தொலைஞ்சு போச்சா..?" அந்த மூத்தவர் என்னை பார்த்துக்கேட்டார்.
"இல்லங்க...இந்த பையன் யாரு..?"
"இது நம்ம புள்ளதான் நைனா...இன்னாத்துக்கு கேட்குற..? டேய், அம்மாசி சார்-க்கு மாம்பழம் வேணும் போல இருக்கு...கொடுரா.."

"ஒரு டஜன் போடவா சார்..?" இது அம்மாசி.

"இல்ல எனக்கு மாம்பழம் வேணாம். உங்களோட கொஞ்சம் பேசணும்..."
"பேசு நைனா...எதாவது சினிமால என் புள்ள நடிக்கணுமா..?"
"அதெல்லாம் இல்ல. உங்களோட ஒரு பேட்டி வேணும்.."
"ஓ..நீ பத்திரிக்கையா..? ஒரு போட்டோ எடு நைனா...என்னையும், என் புள்ளையையும்..."

"சொல்லுங்க ...அம்மாசிய பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலையா..?"
"போய்ட்டுதான் நைனா இருந்தான் போன வருஷம் வரைக்கும். இந்த வருஷம் போல.."
"அதான் ஏன்..?"
"போன வருஷ லீவுக்கு என்னோட தொழில் பாக்க கூட்டி வந்தேன். அவனுக்கு பூட்டு தொழில் பிடிக்கலயாம். அவனா மாம்பழம் வாங்கி யாவாரம் பார்த்தான். அதையே இப்பவும் பாக்குறான்...நல்ல கெட்டிக்கார பய நைனா..இஸ்கூல்ல நல்லா மார்க் எல்லாம் வாங்குவான். "

"அம்மாசி...நீ ஸ்கூல் போலையா..?"
"இதுலையே நல்ல காசு வருது சார். எங்க அப்பா நான் சம்பாதிக்கிற காசு கேட்கமாட்டாரு. அம்மாட்டதான் கொடுப்பேன். அம்மாதான் ஸ்கூல் போகாம இதையே பாக்க சொல்லிருச்சு." அவன் கண்களில் ஒரு ஏக்கம் இருந்தது.
"உனக்கு படிப்பு வேணாமா..?"
"தெரியலையே சார்..அம்மாட்டதான் கேட்கணும்."

"நைனா..பீடி வச்சிருக்கியா..?" அம்மாசியின் அப்பா என்னிடம் கேட்டார்.
"இல்லையே..."
அம்மாசியின் அப்பா பீடி வாங்க கிளம்ப,
"என்ன அம்மாசி உனக்கு படிப்பு வேணாமா..? நல்லா மார்க் வாங்குவன்னு வேற உங்க அப்பா சொல்றாரு.."
"இல்ல சார்...அப்பா இதுல வர்ற வருமானத்துல குடிச்சிடுவார் சார். அதனாலதான் அம்மா என்னையும் கூட அனுப்புது. இப்பவும் நான் வராட்டி குடிக்க போய்டுவார். அதனாலாதான் அம்மா என்னையும் இங்க உட்கார சொல்லிடுச்சு."

குழந்தை தொழிலாளி என்றாலே ஏதோ உணவங்களிலும், சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையிலும், மெக்கானிக் கடைகளிலும் உள்ளவர்கள் என்றே நாம் நினைக்கிறோம். இவர்களும் தொழிலாளர்கள்தான். நாளை உலகத்தில் இவர்களின் நிலைமை ஒரு கேள்விக்குறியே.

இதற்கு ஏதேனும் ஒரு தீர்வு இல்லையா என்று இந்த தருணத்தில் நீங்கள் நினைத்தால், அதற்கான பதிலும் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

இதை போக்க மக்களாகிய நீங்கள்தான் முன் வரவேண்டும். நீங்கள் செய்வது பொருள் உதவியாக இருக்கலாம், அல்லது உங்கள் அறிவை பகிர்வதாய் இருக்கலாம். அவர்கள் இடம் சென்று அவர்களுக்கு நீங்கள் கற்பிக்கலாம். இன்னொரு கலாம் கூட உருவாக்கலாம்.
--------------------------------------------------------------------------------

என்னுடைய முதல் கட்டுரையை எழுதி முடித்தேன். பத்திரிக்கை ஆசிரியரைப் பார்க்க அவரின் அறை சென்றேன். கதவில் இருக்கும் பொத்தானை அமுக்கினேன்.

"யாரு..?" ஆசிரியர் குரல் கேட்டது.
"வாசு சார்..உள்ள வரலாமா..?"
"வா வாசு.."

ஒரு நிமிடம் என்று செய்கை காட்டி, என்னை அமரும்படி செய்கை செய்தார். ஆசிரியர் ஏதோ ஒன்றில் மூழ்கி இருந்தார்.
அவருடைய அறை முழுக்க பத்திரிக்கை தாள்கள்.சுவற்றோரத்தில் சில சாக்கு மூட்டைகள்.அவருக்கு பின் இருக்கும் சுவற்றில் பத்திரிக்கை தொடங்கிய ஆசிரியரின் புகைப்படம். அவரின் மேஜை மீது ஒழுங்கு செய்யப்பட்டு காட்சி அளித்த காகிதங்கள்.

"சொல்லு வாசு.."
"இல்ல சார்...என் ஆர்டிகள்.."

"ம்ம்...நல்லா இருக்கு வாசு....சில சேன்ஜஸ் பண்ணனும். நான் பண்ணிடவா..?"
"என்ன சேன்ஜஸ் சார்..?"

"நல்ல ஆரம்பம்...நல்ல மெசேஜ். ஆனா ஆர்டிகள் முடிச்சது சரி இல்லையோன்னு தோணுது.."
"ஏன் சார்..?"

"நீ யாரு..?"
"சார்..." நான் கொஞ்சம் அதிர்ச்சியானேன்.

"அதாவது நீ இங்க யாரு..?"
"பத்திரிக்கை நிருபர் ."

"பத்திரிக்கையாலனோட வேல நியூஸ் சொல்றது மட்டும்தான். அதற்கான தீர்வு சொல்றது நம்ம வேல இல்ல."
"அப்போ நம்ம பத்திரிக்கைல கட்டுரைகள் எழுத வேண்டிய அவசியம் என்ன சார்..?"

"அத நாம படிக்க வைக்கணும்...அவளோதான். அத பார்த்து வாசகர்கள் என்ன செய்யணும்ங்கறது சொல்றது நம்மோட வேல இல்ல.."
"நாம யோசிக்கிற மாதிரி அவங்களும் வாசகர்களோட வேல படிக்கிறதுன்னு சும்மா இருந்துட்டா..?" இந்த கேள்வி கொஞ்சம் கோபமாகத்தான் வந்தது.

"உணர்ச்சி வசப்படாத வாசு....ஆர்டிகள் நல்லா வந்திருக்கு...கண்டிப்பா ஏதாவது நடக்கும்.."
"என்ன சார் நடக்கும்..? சென்னை அண்ணா சாலையில ஒரு நாளைக்கு போறவுங்க எத்தன பேரு..? ஏன் உங்க ஆபீஸ் ஸ்டாஃப் கூட தினம் அவன்ட்ட பூ வாங்குறாங்களாம். யாராவது இத ஒரு விஷயமா யோசிச்சாங்களா..?"
என்னுடைய சத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

"வாசு. உன்னோட முதல் ஆர்டிகள் இது. நான் இங்க 25 வருசமா வேல செய்றவன். உன்ன தட்டி கொடுத்து தூக்கிவிட வேண்டியது என் வேல. என் அனுபவுத்துல சொல்றேன். நான் சொல்ற மாதிரி போடலாம்." அவரிடம் துளியும் கோபம் இல்லை.

"சரி சார். நீங்க சொல்ற மாதிரியே போடலாம்." அதற்கு மேல் அவரிடம் பேச ஒன்றுமில்லை.

வெளியே வந்தேன். என்னுடைய இரு சக்கர வாகனத்தில் அறைக்கு கிளம்பினேன். வெய்யில் இன்னும் குறையவில்லை. பாண்டியும், அம்மாசியும் தொழில் பார்த்துக்கொண்டிருந்தாகள்.

எனக்குள்ளே மீண்டும் அந்த கேள்விகள் வந்தது.
"டேய்..மெக்கானிக்கல் படிச்சுட்டு ஜர்னலிசம் பக்கம் போறியா..? என்ன பிரச்சனை உனக்கு..? எல்லோரும் சிரித்தனர்.
"அப்போ மெக்கானிக்கல் படிச்சிட்டு சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம்....ஆனா பத்திரிக்க பக்கம் போகக்கூடாது.."

நான் படித்தது பொறியியல். பன்னிரண்டாம் வகுப்பில் நிறைய மதிப்பெண் வாங்கி இருந்ததால் என் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக பொறியியல் படித்தேன். ஆனால் என்னுடைய ஆசை, கனவு எல்லாமே ஒரு பத்திரிக்கையாளனாக வேண்டும் என்பதுதான். என்னை பொறுத்தவரை படிப்பு அறிவை வளர்க்க மட்டுமே. படித்த படிப்பு சம்பந்தமாகத்தான் வேலை செய்ய வேண்டும் என்பதெல்லாம் சுத்தமான பொய். எங்கு நிறைய வருமானம் கிடைக்குமோ அங்கு சேர்வதுதான் இங்கு பலரின் எண்ணம்.

காம்பஸ் இன்டெர்வியு என சொல்லப்படும் வேலை வாய்ப்பில் எனக்கும் வேலை கிடைத்தது. நிறைய வருமானமும் தருவதாய் சொன்னார்கள். வேலை கிடைத்த இரவுதான் நிறைய யோசித்தேன். இந்த நான்கு ஆண்டு கல்லூரி வாழ்க்கை எனக்கான சுயத்தை இன்னும் அதிகரித்திருந்தது. வேலையில் சேர முடியாதென மறுத்துவிட்டேன். வேலைக்கு சேர்ந்தால் ஒரு பத்திரிக்கையாளனாக மட்டுமே வேலை செய்ய வேண்டும் என் உறுதி பூண்டேன்.

என்னுடைய எழுத்து மூலம் நிறைய மாற்றங்கள் கொண்டு வர முடியும் என நம்பினேன். ஏன்..? ஒரு பத்திரிக்கையாளன் நினைத்தால் எந்த விதமான சமூக புரட்சியும் ஏற்படுத்த முடியும். என்னுடைய ஆசைப்படி ஒரு புகழ்பெற்ற பத்திரிக்கையில் இணைந்தேன்.


என் அறை வந்து சேர்ந்தேன்.
என் நண்பனுக்கு கைபேசியில் அழைத்தேன்.
"என்னடா ஜர்னளிச்ட், வேல எப்டி இருக்கு..? வேல இன்னைக்கே ஆரம்பிச்சிட்டியா..?"

எல்லாம் அவனிடம் சொன்னேன்.
"இன்னிக்குதாண்டா சேர்ந்து இருக்க.. அவங்க சொல்றத கேட்க வேண்டியதுதானே..?"


அடுத்த இதழில் என்னுடைய கட்டுரை வந்தது. நிறைய வாசகர்கள் கட்டுரை அற்புதமாக உள்ளதாக சொல்லி இருந்தனர். சிலர் அந்த சிறுவர்களுக்காக வருந்தினர். கண்டிப்பாக இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டு என்றனர். சில பேர் அரசை குற்றம் சொல்லினர்.

வாசகர் கடிதம் எடுத்துக்கொண்டு ஆசிரியர் அறை சென்றேன்.
"நல்ல ரெஸ்பான்ஸ் பார்த்தியா..? அடுத்த கட்டுரை ஆரம்பிக்கிறியா..?"

வெளியே வந்தேன். என் நண்பனை கூப்பிட்டேன்.
"எனக்கு ஒரு உதவி பண்ணுவியா..? உங்க கம்பெனி-ல எனக்கு வேல கெடைக்குமான்னு பாக்குறியா..? உன் அக்கௌன்ட்ல எவ்ளோ பணம் வெச்சிருக்க..?"

கைபேசியை வைத்துவிட்டு பாண்டியையும், அம்மாசியையும் பார்க்கச் சென்றேன்.

(உரையாடல்-சமூக கலை இலக்கிய அமைப்பு போட்டிக்கான சிறுகதை)

33 comments:

SKP said...

Excellent write up machi. Nalla irukku.

Anonymous said...

Super...This is not a word...keep up man...unga future arasiyal valkaila neenga engayo poga poringa....all the best ....:-))

Vidhoosh said...

////படிப்பு சம்பந்தமாகத்தான் வேலை செய்ய வேண்டும் என்பதெல்லாம் சுத்தமான பொய். எங்கு நிறைய வருமானம் கிடைக்குமோ அங்கு சேர்வதுதான் இங்கு பலரின் எண்ணம்......."எனக்கு ஒரு உதவி பண்ணுவியா..? உங்க கம்பெனி-ல எனக்கு வேல கெடைக்குமான்னு பாக்குறியா..? உன் அக்கௌன்ட்ல எவ்ளோ பணம் வெச்சிருக்க..?"///

ரொம்ப வலிக்கிறது...

மொழி said...

நன்றி சு.கு.

மொழி said...

நன்றி அனானி

மொழி said...

நன்றி விதூஷ்

நந்தா said...

கதைக்கரு சட்டையைப் பிடித்து உலுக்கி கன்னத்தில் அறைகிறது!
இங்கே ஒரு விஷத்தை யோசிப்பதற்கும் செய்வதற்குமான இடைவெளி நிறைய தமிழர்களின் வாழ்க்கை!!
கதைக்குள் கதை வைத்த மணிரத்னம் ஸ்டைலும் ஓகே!
வெற்றி நமதே!!!
ஆனா அந்த detailing........?

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் சொல்ல மட்டும் தான் முடியும்!

vj said...

kadhai super!! in my opinion, 99% of ppl fall into this category (including me) -
வாசகர்கள் கட்டுரை அற்புதமாக உள்ளதாக சொல்லி இருந்தனர். சிலர் அந்த சிறுவர்களுக்காக வருந்தினர். கண்டிப்பாக இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டு என்றனர். சில பேர் அரசை குற்றம் சொல்லினர்.

only 1% fall into this category -
"எனக்கு ஒரு உதவி பண்ணுவியா..? உங்க கம்பெனி-ல எனக்கு வேல கெடைக்குமான்னு பாக்குறியா..? உன் அக்கௌன்ட்ல எவ்ளோ பணம் வெச்சிருக்க..?" கைபேசியை வைத்துவிட்டு பாண்டியையும், அம்மாசியையும் பார்க்கச் சென்றேன்.

am sure that 1% will increase, if this story reaches to the first category.. lets spread this..

நாடோடி இலக்கியன் said...

//படிப்பு சம்பந்தமாகத்தான் வேலை செய்ய வேண்டும் என்பதெல்லாம் சுத்தமான பொய். எங்கு நிறைய வருமானம் கிடைக்குமோ அங்கு சேர்வதுதான் இங்கு பலரின் எண்ணம்......."//

அருமை.
வெற்றிபெற வாழ்த்துகள்.

சென்ஷி said...

:-)

கதைக்கரு ரொம்ப நல்லா இருக்குங்க.. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

மொழி said...

@@கோபிநாத்.
வாழ்த்துக்களுக்கு நன்றி.

மொழி said...

நன்றி vj

மொழி said...

நன்றி நாடோடி இலக்கியன்.

மொழி said...

மிக்க நன்றி சென்ஷி.

மொழி said...

நன்றி நந்தகுமார்.

Anonymous said...

வாழ்த்துக்கள்!

மொழி said...

நன்றி கவின்

செல்வா(தமிழ்செல்வன்) said...

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் சிறுகதையில் பெருவதையை (சிருவர்வதை சட்டத்தை ) ஆணித்தரமாக கூறியதற்கு வாழ்த்துக்கள் மற்றும் வெற்றிபெறவும் ........

மொழி said...

நன்றி செல்வா..

Prabhu C said...

நடைமுறை வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி , நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று யோசிக்க வைக்கும் கதை...நிச்சயம் வழி பிறக்கும், அந்த நம்பிக்கையில்தான் உலகம் இன்னும் இயங்குகிறது ..!

மொழி said...

நன்றி பிரபு..

Subha said...

Arumai!

மொழி said...

நன்றி சுபா

தீப்பெட்டி said...

அருமை..
வாழ்த்துகள்..

அன்புடன் அருணா said...

நல்லா எழுதிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

anujanya said...

ஒரு புறம் குழந்தைத் தொழிலாளர் பற்றி எழுதியிருந்தாலும், படித்த படிப்பு, பார்ர்க்கும் வேலை பற்றி நீங்கள் எழுதியதும் நிறைய சிந்திக்க வைக்கிறது. ஒத்துப் போகிறேன் என்று அர்த்தமில்லை :)

நல்ல கதை. வாழ்த்துகள்.

அனுஜன்யா

மொழி said...

நன்றி தீப்பெட்டி..

மொழி said...

நன்றி அன்புடன் அருணா..

மொழி said...

நன்றி அனுஜன்யா..

Kalpagam said...

மிக நல்ல கதை. கதா நாயகன் பத்திரிகையாளனாகி பல உண்மைகளைத் தோலுரிப்பதை விட வேறு வேலையில் சேர்ந்து அதன் மூலம் நிறைய சிறுவர்களின் வாழ்க்கையை மாற்றக் கூடும் என்றே தோன்றுகிறது. பல பேர் (என்னைப் போல) வெறுமனே பரிதாப்படுவதோடு நிறுத்திவிடுகிறோம்.. ஏதேனும் செய்ய வேண்டுமென்று கூட நினைக்கிறோம்.. ஆனால் செயல்படுத்துவது எத்தனை பேர்? இது போன்ற கதா நாயகர்கள் நிறையப் பேர் தோன்ற வேண்டும்.

வாழ்த்துகள்!

மொழி said...

நன்றி கல்பகம்..

சித்த கார்த்திகை(stephen) said...

very good..

wishes for win

please have a look on my story

http://yuvaking2005.blogspot.com/

Post a Comment